Monday, November 16, 2009

பட்டினத்தார்
பிறந்தன இறக்கும்,
இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்,
மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்,
சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்,
மறந்தனவுனரும்;
புணர்ந்தன பிரியும்,
பிரிந்தன புணரும்...

௨)
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்,
திடப்படுமோ? நினருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிளிர் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்கனாதனே!

3)
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!

Friday, November 13, 2009

அவள்

வேறென்ன
வேண்டுமெனக்கு?
ஒவ்வொரு
நாளும்
இதே நேரம்
இதே மயக்கம்
ஒவ்வொருவிதமாய்!

காற்றிலே
படபடக்கும்
கண்ணாடிக்கூந்தலோடு
அளவளாவி
மகிழும்
நீலத்தாவணியும்,
கொலுசினிசைக்கேற்ப
நர்த்தனமாடும்
பாவாடைப்பூக்களுமாய்
அவளின்
ஈடில்லா
அழகில்
பொறாமை
கொண்ட
பிறை
நிலவானது
தோல்வி
முகங்காட்டமறுத்து
இருளுக்குள்
புதையுண்டதே
தேய்பிறைக்கு அடுத்து
வரும்
அமாவாசை
ஆகும்...

ஆட்கள் இல்லாத கடற்கரை

ஆட்கள் இல்லாத கடற்கரையில்
யாரோ இருந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்;

இல்லையெனில்
என் மனதில் ஏன் இத்தனை
இன்ப நினைவுகள் சுரக்கின்றன!

அலைகளை முடிவற்றுப்
பார்த்தபடி அமர்ந்திருக்கின்றேன்;

நீ போன பாதையென

நீ போன பாதையென
ஏதோ ஓர் தடத்தில் ஊர்ந்து செல்கிறேன்..
நீ சாத்திய கதவென்று
ஏதோ ஓர் கதவினைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன்...

என் வழிதனை
நானே உணர்ந்து கொள்கிறேன்,
ஆகாயத்தை பார்த்தபடி
ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றேன் வெற்றிடத்தை;

எப்போதும் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றது
எதிர்பாராத குழப்பங்களும்
சில மறதிகளும்...

உன் அமைதி வேளை

உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடி சமவெளி;
இலைகள் உதிர்வதில்லை
நீர்த்துளிகள் சொட்டுவதில்லை
காலடிகள் கேட்பதில்லை
ஒரு பறவையும் துயில் கலைவதில்லை;

எந்தக் குறுக்கீடும் நிகழாத
உன் அமைதி வேளை
திடீரென
ஒரு நாள்
என்னை நானே கலைத்துக் கொண்டு
தேம்ப விடுகின்றது!

நான், நிலா, கடல்!

நான்...
நிலா...
கடல்...

"இன்று முதல் நான் தேய்கிறேன்
நேற்றென்னை காண வராததால்" என்றாள் நிலா;

"தாமதம் தவறு தான்,
தவறேன் இன்னியும் நான்" என்றேன்;

"தேவையில்லை நீ
தேடி வராதே,
தேடி வந்து தீனியாய் கொட்டாதே" என்றாள்;

பார்த்திட்டேன் அவளை ஏக்கத்துடன்,
பார்வைக்கு தப்பி ஒளிந்துக் கொண்டால் மேகத்தினூடே;

"அவளை வெளியே இழு
அல்லது என்னை உள்ளே இழு' என்றேன் கடலிடம்.

நிலவுக்கும்
நினைக்கும் இடையே
தூதன் இக்கடலே, அலையாய் வருடி
அவளை அழைத்து வருவான் என்ற ஏக்கத்துடன்
கடல் அலையை ஆவலுடன் கேட்டேன்;

கடல் அலைகளை
நிலவுக்கு அனுப்பியது,
நீர்த்துகள்களை திருப்பி விட்டது மேகம்;
நிலவும் ஒளிந்துக் கொண்டாள்;

வெறும் சப்தத்துடன் எனை நோக்கிய
கடலுக்கு என்ன துயரம் தெரிந்தது,
என் பொருட்டு விண் தொட்டது நீர்த்துளிகள்
மேகத்து நண்பனிடத்தே பணிந்து
அதனினை பணித்து
நிலவினை அடைந்தது தூது;

மேகம் திரையை விளக்கியது,
நிலா, அவளும் என்னை நோக்கினாள்
மன்னித்து விடு,
தேய்ந்திடதே- நீ இல்லாமல்
வாடிடும் இவ்விதயம் என்றேன்;

மேகம் திரையை விளக்க
மதி வெளியே வந்தாள்
என்னுளே நுழைந்தாள்
கடல் ஆர்ப்பரித்தது;

'நான் உனாக்க்காகவே காத்திருக்கிறேன்,
காத்திட வைக்காதே,
காத்திட்டு வைத்துக் கொள் என்னை"
என்றாள் நிலா!!

"உயிருள்ளவரை என்னுள் நீ" என்றேன் நான்.

நான்..
நிலா...
கடல்....