Friday, November 13, 2009

நான், நிலா, கடல்!

நான்...
நிலா...
கடல்...

"இன்று முதல் நான் தேய்கிறேன்
நேற்றென்னை காண வராததால்" என்றாள் நிலா;

"தாமதம் தவறு தான்,
தவறேன் இன்னியும் நான்" என்றேன்;

"தேவையில்லை நீ
தேடி வராதே,
தேடி வந்து தீனியாய் கொட்டாதே" என்றாள்;

பார்த்திட்டேன் அவளை ஏக்கத்துடன்,
பார்வைக்கு தப்பி ஒளிந்துக் கொண்டால் மேகத்தினூடே;

"அவளை வெளியே இழு
அல்லது என்னை உள்ளே இழு' என்றேன் கடலிடம்.

நிலவுக்கும்
நினைக்கும் இடையே
தூதன் இக்கடலே, அலையாய் வருடி
அவளை அழைத்து வருவான் என்ற ஏக்கத்துடன்
கடல் அலையை ஆவலுடன் கேட்டேன்;

கடல் அலைகளை
நிலவுக்கு அனுப்பியது,
நீர்த்துகள்களை திருப்பி விட்டது மேகம்;
நிலவும் ஒளிந்துக் கொண்டாள்;

வெறும் சப்தத்துடன் எனை நோக்கிய
கடலுக்கு என்ன துயரம் தெரிந்தது,
என் பொருட்டு விண் தொட்டது நீர்த்துளிகள்
மேகத்து நண்பனிடத்தே பணிந்து
அதனினை பணித்து
நிலவினை அடைந்தது தூது;

மேகம் திரையை விளக்கியது,
நிலா, அவளும் என்னை நோக்கினாள்
மன்னித்து விடு,
தேய்ந்திடதே- நீ இல்லாமல்
வாடிடும் இவ்விதயம் என்றேன்;

மேகம் திரையை விளக்க
மதி வெளியே வந்தாள்
என்னுளே நுழைந்தாள்
கடல் ஆர்ப்பரித்தது;

'நான் உனாக்க்காகவே காத்திருக்கிறேன்,
காத்திட வைக்காதே,
காத்திட்டு வைத்துக் கொள் என்னை"
என்றாள் நிலா!!

"உயிருள்ளவரை என்னுள் நீ" என்றேன் நான்.

நான்..
நிலா...
கடல்....

No comments:

Post a Comment